மீண்டும் இணையும் சசிகுமார், சமுத்திரகனி
ADDED : 56 minutes ago
நண்பர்களாக சினிமாவில் அறிமுகமான சசிகுமாரும், சமுத்திரனியும் தற்போது தனித்தனி டிராக்கில் பயணித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் 'காந்தா' படத்திற்காக சமுத்திரகனியும், 'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்காக சசிகுமாரும் விருதை பெற்றனர்.
அதோடு தாங்கள் மீண்டும் இணையும் படத்தை பற்றியும் அறிவித்துள்ளனர். 'ஸ்கூல் பஸ்' என்ற படத்தை சமுத்திரகனி இயக்கி நடிக்கிறார். சசிகுமார் நடிகராக இணைகிறார். இவர்களுடன் கிச்சா சுதீப், மிஷ்கின் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் தமிழ், தெலுங்கு கன்னட மொழிகளில் தயராகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 3 மொழியை சேர்ந்த நடிகர்களும் இணைந்து நடிப்பார்கள் என்று தெரிகிறது. பள்ளி காலத்து நண்பர்கள் அதன்பிறகான வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.