உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுகங்களின் மிடில் கிளாஸ் மாப்பிள்ளை

புதுமுகங்களின் மிடில் கிளாஸ் மாப்பிள்ளை

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏகாம்ரம் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை'. இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஷாந்த் ஆர்வின் இசை அமைக்கிறார், அபிஷேக் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குநனர் கூறும்போது, 90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !