ஜெயிலர் 2வில் திலீப்பாக சுராஜ் வெஞ்சாரமூடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. வரும் அக்டோபர் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகத்தில் இடம் பெறாத சில முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் குறிப்பாக மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இவர் திலீப் என்கிற தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இவரது கதாபாத்திரம் குறித்து தற்போது டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வித்தியாசமாக கார் பானட்டின் மீது அமர்ந்துகொண்டு சுருட்டு பிடித்தபடி ஜெயிலருக்கு எச்சரிக்கை விடுவது போன்று அவர் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே வீரதீர சூரன், யூத் ஆகிய படங்களில் தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த சுராஜ், ஜெயிலர் 2விலும் நிறைய ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார் என எதிர்பார்க்கலாம்.