கரீனா கபூர், பிருத்விராஜ் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் சுமாரான தொடக்கம்
ஹிந்தியில் மேக்னா குல்சார் இயக்கத்தில், மலையாள நடிகர் பிருத்விராஜ், கரீனா கபூர் கான் நடித்துள்ள படம் தாயரா. கிரைம் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படம் ஒரு காலத்தில் நாடு முழுவதையும் உலுக்கிய ஐதராபாத்தின் திஷா சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பரங்கள் பார்வையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. நேற்று திரைக்கு வந்துள்ள இப்படம் எதிர்பார்த்தபடியே, பாக்ஸ் ஆபீஸிலும் மிகவும் குறைந்த அளவிலான வசூலுடன் தொடங்கியுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி, தாயரா படம் வெறும் 1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. பிரபல நடிகர்கள் நடித்துள்ள ஒரு படத்திற்கு இது மிகவும் ஏமாற்றமளிக்கும் தொடக்கமாகும்.
வார இறுதி நாட்களில் இதன் வசூல் அதிகரிக்கும் வாய்ப்பும் குறைவாகவே தெரிகிறது. விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற, தல்வார் மற்றும் ராஷி படங்களைத் தொடர்ந்து, ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மேக்னா குல்சார் இணையும் மூன்றாவது படம் தாயரா ஆகும்.