பண மோசடி : பிக்பாஸ் பிரபலம் சிறையில் அடைப்பு
ADDED : 11 hours ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் பங்கேற்றவர் வர்ஷினி வெங்கட். ‛டிடி நெக்ஸ்ட் லெவல்' உள்ளிட்ட ஓரிரு படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். தவெக., விற்கு ஆதரவாக வலைதளங்களில் பிரச்சாரம் கூட செய்தார். இந்நிலையில் மோசடி புகாரில் இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
குறும்படம் தயாரிப்பதாக கூறி பணத்தை முதலீடு செய்யுங்கள் எனக் கூறி வர்ஷினி வெங்கட் மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது தன்னை மிரட்டி ஆள் வைத்து அடித்ததாகவும் செல்போன் மற்றும் 50 ஆயிரம் பணம் பறித்ததாகவும், பின்னர் மீண்டும் மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்ததாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் வர்ஷினி வெங்கட்டை கைது செய்தனர். அவருக்கு 7 நாள் நீதிமன்ற காவல் உத்தரவு பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.