உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியான ஹூமா குரேஷியின் ‛பேபி டூ டை டூ'

ஓடிடியில் வெளியான ஹூமா குரேஷியின் ‛பேபி டூ டை டூ'

ஹிந்தியில் நாசிகேத் சமந்த் இயக்கத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ‛பேபி டூ டை டூ'. ஹூமா குரேஷி நடிப்பில் வெளியான இந்த கிரைம் ஆக்ஷன் திரில்லர் படம் திரையரங்குகளில் வெளியான சுமார் 12 வாரங்களுக்குப் பிறகு தற்போது டிஜிட்டல் தளத்தில் நெட்பிளிக்ஸில் இன்று(செப்., 23) வெளியாகியுள்ளது.

இதில் ஹூமா குரேஷி வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத கொலையாளியாக நடித்துள்ளார். தன் சகோதரியின் கொலைக்குப் பழி வாங்கத் துடிக்கும் அவர், அதேசமயம் கொலை பணிகளையும் செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவர் செய்யும் ஒரு கொலை முயற்சி தவறாக முடிய, குற்றவாளிகள் மற்றும் காவல் துறையினருக்கு இடையிலான ஆபத்தான நிகழ்வுச் சங்கிலியில் மாட்டிக் கொள்கிறார்.

இப்படத்தில் சிக்கந்தர் கெர், சுங்கி பாண்டே, சீமா பஹ்வா ஆகியோருடன் ரசித் சிங், வித்யா மல்வாடே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சலீம் சிப்ளிங்க்ஸ் பேனரின் கீழ் ஹூமா குரேஷியும் சாகிப் சலீமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

2 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடக் கூடிய பேபி டூ டை டூ பழிவாங்கும் கதைக் களத்துடன் கிரைம், ஆக்ஷன், மிஸ்டரி மற்றும் டார்க் காமெடி ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !