'மான்ஸ்டர்' படத்துக்காக சல்மான்கான் - அரவிந்த் சாமியின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பு!
பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். 'மான்ஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார். மும்பையில் தற்போது நடைபெற்று வரும் இப்படத்தின் 10 நாள் படப்பிடிப்பு அட்டவணையில் அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார். இதில், சல்மான்கான் மற்றும் அரவிந்த் சாமி இருவரும் இடம்பெறும் முக்கியமான காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.
மேலும், சல்மான் கான் மற்றும் அரவிந்த் சாமி இடையே நடக்கும் பூனை-எலி விளையாட்டு போன்ற சுவாரஸ்யமான காட்சிகளும், சில விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் முடிந்த பிறகு, அரவிந்த் சாமியின் தனிப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தில் ராஜூ தயாரிக்கும் இப்படம் 2027 ஈத் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.