உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹாலிவுட் படத்தை அப்படியே காப்பி அடித்த தமிழ் படம்

பிளாஷ்பேக் : ஹாலிவுட் படத்தை அப்படியே காப்பி அடித்த தமிழ் படம்

ரிச்சர்ட் டான்னர் இயக்கத்தில் 1976ல் ரிலீஸாகி உலகத்தையே மிரள வைத்த படம் 'தி ஓமன்'. இந்த படத்தின் அப்பட்டமான காப்பியாக தமிழில் வந்த படம் 'ஜென்ம நட்சத்திரம்'. 1991-ல் ரிலீஸான இந்த படத்தை திகில் கதைகளை வைத்து படங்கள் தயாரித்து இயக்கிய தக்காளி சீனிவாசன் இயக்கினார்.

ஒரிஜினல் 'தி ஓமன்' படத்தின் கதை: ரோமில் ராபர்ட்- - கேத்ரின் தம்பதியருக்கு குழந்தை இறந்து பிறக்கிறது. குழந்தை இறந்து பிறந்ததை மனைவி மற்றும் உறவினர்களுக்குச் சொல்லாமல் மறைத்து ஒரு குழந்தையை அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்து மனைவி அருகில் வைத்து தங்களுக்குப் பிறந்ததாக ஏமாற்றுகிறார் ராபர்ட். டேமியன் என்று பெயரிட்டு வளர்க்கப்படும் அந்தக் குழந்தை வளர வளர வித்தியாசமான சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்தேறுகிறது. காரணம் ராபர்ட் கொண்டு வந்தது குழந்தை அல்ல... பயங்கர சாத்தான்.

தமிழ்ப் படமான 'ஜென்ம நட்சத்திரம்' படத்திலும் இதே கதைதான். இந்த படத்தில் புதுமுகங்கள் பிரமோத், அனந்தராம், சிந்துஜா, பேபி விசித்ரா நடித்திருக்கிறார்கள். பாதிரியார் வேடத்தில் நாசரும், வேலைக்காரர் வேடத்தில் விவேக்கும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகன் பிரமோத் இந்தப் படத்தில் முதலமைச்சரின் செயலாளர். ஒரிஜினல் ஓமனில் நாயகன் ராபர்ட் அமெரிக்க தூதுவர். இரண்டு படங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இது மட்டும்தான். தமிழில் ஜென்ம நட்சத்திரம் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Anand
2026-09-25 13:58:46

One of the cult classic for 90s kids. The night scene at the cemetery with canines surrounding the protagonist and the photographer still sends me shivers.