உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் தனுஷ் சாமி தரிசனம்

பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் தனுஷ் சாமி தரிசனம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ஓம் படத்தை அடுத்து லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனது 56வது படத்தில் நடிக்க போகிறார் தனுஷ். படத்தின் பூஜை நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்க, வடிவேலுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதன்முதலாக இப்படத்தின் மூலம் தனுசும்-வடிவேலுவும் இணைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தனது அப்பா, அம்மா, அக்கா மற்றும் மகன்கள் உடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் தனுஷ். அதிகாலை ஆறு மணிக்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு பழனி முருகனை தரிசனம் செய்திருக்கிறார். அதன்பிறகு ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கு வந்துள்ள தனுஷை அங்கு கூடியிருந்த பக்தர்கள் சூழ்ந்து கொண்டதை அடுத்து அவர்களுடன் செல்பி எடுத்து விட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து தனது குடும்பத்தாருடன் காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !