உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளை, செப் 27ல் நடிகர் சங்க பொதுக்குழு : புது கட்டட திறப்பு விழா தேதி அறிவிக்கப்படுமா?

நாளை, செப் 27ல் நடிகர் சங்க பொதுக்குழு : புது கட்டட திறப்பு விழா தேதி அறிவிக்கப்படுமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் எழுபதாவது பொதுக்குழு கூட்டம் நாளை செப்டம்பர் 27ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள், நடிகர் சங்க கட்டடம் நிதி மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படுகின்றன.

இந்த கூட்டத்தில் புதிய நடிகர் சங்க கட்டடத்தின் தற்போதைய நிலை மற்றும் கட்டடத்திற்கு செலவான தொகை, இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது, சங்க கட்டடம் எந்தளவுக்கு முடிந்து உள்ளது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கப்பட உள்ளது. மேலும் நடிகர் சங்க பொது கட்டிடம் எப்போது திறக்கப்படும் என்ற தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. மூத்த கலைஞர்கள் பலருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. அது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல் தேசிய விருது மற்ற விருதுகள் பெற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட இருக்கிறது.

விஷால் பங்கேற்கமாட்டார்
‛‛புருஷன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக முதுகில் கடுமையான வலி உள்ளது. உடலும் ஒத்துழைக்கவில்லை. ஆகையால் நாளை நடக்கும் நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியாது'' என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !