உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 ஆயிரம் வயது மனிதன், எலி, சூரி, அஞ்சலி: ராம் இயக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' கதை

8 ஆயிரம் வயது மனிதன், எலி, சூரி, அஞ்சலி: ராம் இயக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' கதை


ராம் இயக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படம் அக்டோபர் 1ல் ரிலீஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் கதை பற்றிய சில தகவல் வெளியாகி உள்ளன. 8 ஆயிரம் ஆண்டு வாழும் நிவின்பாலி ஒரு பெண்ணை பல காலம் தேடுகிறார். ஒரு தீபாவளி நாளில் ரயிலில் தூக்கத்தில் இருக்கும் போது கனவில் அந்த பெண்ணை சந்திக்கிறார்.

அப்போது வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பும் சூரி அவரை எழுப்ப என்ன நடக்கிறது? அந்த பெண் அஞ்சலி யார்? நிவின் பாலி, சூரி இடையில் ஒரு எலி என்ன செய்கிறது என்பது கதையாம். படத்தில் ரயில் எலியும் முக்கிய பாத்திரமாம். இந்த காலம், முந்தைய சில காலம் என கதை விரிகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !