உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மைசூரில் தர்மன் படப்பிடிப்பு : ராம் பொதினேனியும் இணைந்தார்

மைசூரில் தர்மன் படப்பிடிப்பு : ராம் பொதினேனியும் இணைந்தார்

‛ஜெயிலர் 2'வை அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‛தர்மன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மருத்துவ பின்னணியில் நடக்கும் கிரைம் திரில்லராக, ஆக் ஷன் படமாக உருவாகிறது. இதில் டாக்டராக ரஜினி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடக்கிறது. அங்கு ஒரு பாடல் காட்சி உட்பட சில முக்கியமான காட்சிகள் படமாகின்றன. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும், ‛தி வாரியர்' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த பிரபலமான ராம் பொதினேனி நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இந்நிலையில் மைசூரில் படப்பிடிப்பு இடைவெளியின் போது ரஜினிகாந்த், ராஷி கண்ணா மற்றும் ராம் பொதினேனி ஆகியோர் நடைபயிற்சி சென்ற போது எடுத்த போட்டோக்களை ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தர்மன் படத்தில் ராம் நடிப்பது உறுதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !