உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யோகிபாபு, சத்யாவின் ‛கோல்டன் பாக்கியம்'

யோகிபாபு, சத்யாவின் ‛கோல்டன் பாக்கியம்'

தமிழ் காமெடி நடிகர் யோகிபாபுவும், தெலுங்கு காமெடி நடிகர் சத்யாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். இதற்கு ‛கோல்டன் பாக்கியம்' என பெயரிட்டுள்ளனர். ஜெயஸ்ரீ மற்றும் அதிராஜ் கதாநாயகிகளாக நடிக்க, சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பவன் பாசம்செட்டி இயக்குகிறார்.

படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக் கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாக சொல்கிறார். இப்படி இந்த வீடியோ உள்ளது.

காதலுடன் கிரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் 'தெலுமிழ்' படைப்பு என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !