14 வருடம் கழித்து உருவாகும் 'பேச்சுலர் பார்ட்டி' 2ம் பாகத்திற்காக 'வாழ்வே மாயம்' பாடலை பாடிய மம்தா மோகன்தாஸ்
கடந்த 2012ல் மலையாளத்தில் ரகுமான், கலாபவன் மணி, விநாயகன், ஆசிப் அலி உள்ளிட்டோர் நடிப்பில் 'பேச்சுலர் பார்ட்டி' திரைப்படம் வெளியானது. இயக்குனர் அமல் நீரத் இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது 14 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் 'பேச்சுலர் பார்ட்டி டூயக்ஸ்' என்கிற பெயரில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திலிருந்து தற்போது 'வாழ்வே மாயம்' என்கிற ஒரு பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை நடிகை மம்தா மோகன்தாஸூம், வளர்ந்து வரும் மலையாள நடிகரான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' நடிகர் ஸ்ரீநாத் பாசியும் இணைந்து பாடியுள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இந்தக் பாடலுக்கு இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் குஞ்சாக்கோ போபன், நஸ்லேன், சவ்பின் சாஹிர், சைன் டாம் சாக்கோ, நதியா, ரஜிஷா விஜயன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.