ராஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்! - விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'ரணபாலி' படம் அக்டோபர் 16ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் தற்போது அவர் அப்படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில் மனைவி ராஷ்மிகா குறித்து சொன்ன தகவல் கவனம் பெற்றுள்ளது.
அவர் கூறுகையில், ''நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குத் திருமணம் முடிந்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருக்கிறது. நல்லதொரு குடும்பம் அமைந்ததும், ராஷ்மிகா போன்ற ஒரு மனைவி கிடைத்ததும் நான் செய்த பாக்கியம்'' என்று கூறினார்.
குறிப்பாக, ரணபாலி படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், அவரின் இந்த கருத்துக்கள் ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் தேவரகொண்டாவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கருத்துகளும், திரையில் ராஷ்மிகாவுடனான ஜோடியும் இப்படத்தின் விளம்பரங்களுக்குக் கூடுதல் சுவாரசியத்தைச் சேர்த்துள்ளன.