உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நன்றாக படியுங்கள்... குடும்பம் தான் ‛பர்ஸ்ட்' : ரசிகர்கள் முன்னிலையில் சிவகார்த்திகேயன் பேச்சு

நன்றாக படியுங்கள்... குடும்பம் தான் ‛பர்ஸ்ட்' : ரசிகர்கள் முன்னிலையில் சிவகார்த்திகேயன் பேச்சு

சென்னை, பரணிபுதூரில் 2000க்கும் அதிகமான ரசிகர்மன்ற நிர்வாகிகளை நேற்று சந்தித்து பேசினார் சிவகார்த்திகேயன். மினி அரசியல் மாநாடு மாதிரி நடந்த இந்த கூட்டத்தில் அனைவரும் வெள்ளை சட்டையுடன் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்த இடத்தில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. வெளியிலேயே அவை பத்திரமாக வாங்கி வைக்கப்பட்டன. நடிகர் தனுஷ் ,ஜெயம் ரவி, சூர்யா ஆகியோர் பாணியில் சிவகார்த்திகேயனும் ரசிகர்களை சந்தித்தார்.

இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், ‛‛நானும், விஜய் சேதுபதியும் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் ஜெயித்து இருக்கிறோம். மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆங்கர் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்றார்கள் நான் நடிகராக ஜெயித்து இருக்கிறேன். விமர்சனம் செய்பவர்கள் எப்போதும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நாம் அனைவரும் அன்பினால், அன்புக்காக ஒன்றாக இருக்கிறோம். நம்முடைய நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள். நிறைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க, அது நம்மளை மேம்படுத்தும். சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்கும், அது ஒரு நல்ல மாற்றாகவும் இருக்கும். நன்றாகப் படியுங்கள், நன்றாகச் சம்பாதியுங்கள். குடும்பம்தான் முதலில் என நினைக்க வேண்டும். அதன்பிறகு தான் மற்றது எல்லாம். சேயோன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது. ரசிகர்கள் விரும்பும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு படமாக இது அமையும்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !