உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.250 கோடி வசூலைக் கடந்த ஹிந்தி 'திரிஷ்யம் 3'

ரூ.250 கோடி வசூலைக் கடந்த ஹிந்தி 'திரிஷ்யம் 3'

அஜய் தேவ்கன், இஷிதா தத்தா, ஸ்ரேயா, தபு மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'திரிஷ்யம் - தி கன்குலுஷன்'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 100 கோடியை நெருங்கிய நிலையில் இரண்டு நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேற்றுடன் முடிந்த முதல் வார இறுதியில் 250 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

2026ல் அஜய் தேவ்கன் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'தமால் 4' படம் 200 கோடி வசூலைக் கடந்திருந்தது. அதற்கடுத்து தற்போது 'த்ரிஷ்யம் 3' படமும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஹிந்தித் திரையுலகத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் 200 கோடி வசூலைக் கடந்த 8வது படமாக இப்படம் உள்ளது.

அஜய் தேவ்கன் படங்களின் வசூலைப் பொறுத்தவரையில் இதற்கு முன்பு வெளிவந்த, “ரெய்டு 2, சிங்கம் அகய்ன், ஷைத்தான், திரிஷ்யம் 2, கங்குபாய் கத்தியவாடி, தன்ஹாஜி, டோட்டல் தமால், கோல்மால் அகய்ன்,” ஆகிய படங்கள் 200 கோடி வசூலைக் கடந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !