ஜெயலலிதா வேடத்தில் நடிப்பாரா திரிஷா
ஜெ எம் பஷீர் நடிக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு திரிஷா தரப்பில் இருந்து இன்னமும் எந்த பதிலும் வரவில்லை. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கிய 'தலைவி' படத்தில் கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணனும் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார். ஆனால் இருவருக்குமே அந்த கேரக்டர் பெரிதாக செட் ஆகவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கம்பீரம் ஆளுமை அவர் உடல் மொழி இவர்களுக்கு பொருந்தவில்லை என விமர்சனங்கள் வந்தன.
எனவே திரிஷா அந்த பவர்புல் கேரக்டரில் நடிப்பாரா என பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது. காரணம் ஜெயலலிதாவின் உருவம் , உடல் மொழி வேறு, திரிஷாவின் பாடி லாங்குவேஜ் வேறு. இப்போதைக்கு ஜெயலலிதாவாக நடித்தால் அது சர்ச்சை ஏற்படுத்தும், அரசியல் வட்டாரத்தில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என திரிஷாவுக்கும் நன்கு தெரியும். எனவே அவர் நடிப்பதில் சந்தேகமே என்கிறார்கள். ஒரு பெரிய படக்குழு ,பெரிய இயக்குனர், பெரிய நிறுவனம் தயாரித்தால் ஒருவேளை ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வெப் சீரியஸில் அல்லது படத்தில் திரிஷா நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.