உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹனுமான் அன்ஸ் படத்தின் 21 வயது தயாரிப்பாளருக்கு சஞ்சய் தத் பாராட்டு

ஹனுமான் அன்ஸ் படத்தின் 21 வயது தயாரிப்பாளருக்கு சஞ்சய் தத் பாராட்டு

சமீபத்தில் ஹாலிவுட்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 450 கோடி வரை வசூலித்த திரைப்படம் ஹனுமான் அன்ஸ். விஷால் சதுர்வேதி இயக்கியிருந்தார். இதன் தயாரிப்பாளர்களில் 21 வயதான அனுப்ரியா நாகர் என்பவரும் குறிப்பிடத்தக்கவர். இந்த படம் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அனுப்ரியாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சஞ்சய் தத் இது குறித்து கூறுகையில், ‛‛நான் பல படங்கள் வந்து போவதை பார்த்து இருக்கிறேன். சில படங்கள் வரலாறு படைக்கின்றன. ஆனால் வெறும் 21 வயதில் இந்த படத்திற்காக சாதித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி படமாக மாற்றுவதற்கு தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். உன்னை பற்றி நான் பெருமைப்படுகிறேன். உன் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். உனது கதை இப்போது தான் தொடங்கியுள்ளது'' என தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !