உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோசடி பேர்வழி ; மஞ்சு வாரியருக்கு எதிராக டார்ச்சர் செய்யும் இயக்குனருக்கு மல்லிகா சுகுமாரன் பதிலடி

மோசடி பேர்வழி ; மஞ்சு வாரியருக்கு எதிராக டார்ச்சர் செய்யும் இயக்குனருக்கு மல்லிகா சுகுமாரன் பதிலடி


மலையாள திரையுலகில் விருதுகளுக்காக மட்டும் படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சனல்குமார் சசிதரன். மஞ்சு வாரியார் நடிப்பில் 'காயாட்டம்' என்கிற படத்தை அவர் இயக்கினார். அந்தப் படத்தை மஞ்சுவாரியரே தயாரித்தார். ஆனால் படம் முடிவதற்குள்ளாகவே இருவருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு மஞ்சு வாரியர் அந்த படத்தை ரிலீஸ் கூட செய்யாமல் இயக்குனரிடம் பேசுவதையே விட்டுவிட்டார்.

ஆனால் இயக்குனரோ மஞ்சு வாரியர் குறித்து அவர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் உயிருக்கு ஆபத்து, அவரை காப்பாற்றுங்கள் என்பது போல அடிக்கடி முகநூலில் பதிவு வெளியிடுவதும் கோரிக்கை வைப்பதுமாக இருந்தவர் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வெளியே உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார் அதன் பிறகு போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இது ஒரு தொடர்கதையாகி வருவதால் இதனை கண்ணுற்ற நடிகையையும் நடிகர் பிரித்விராஜின் தாயாருமான மல்லிகா சுகுமாரன் இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “மஞ்சுவாரியரின் அணுகுமுறை மிகவும் சரியானது. எதற்காக வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டும். அவர் எதிர்கொள்ள வேண்டியதை எல்லாம் சந்தித்து விட்டார் காலப்போக்கில் எல்லோரும் உண்மையை புரிந்து கொள்வார்கள். அந்த இயக்குனர் அந்த பெண் தனது சொந்த வாழ்க்கையில் நிம்மதியாக வாழ தொடங்கிய போது தான் இவ்வளவு கதைகளையும் பேச தொடங்குகிறார். அவர் ஒரு மோசடி பேர்வழி என்பது இதிலேயே தெளிவாக தெரியவில்லையா? இது போன்றவர்கள் மீது எத்தனையோ பெண்கள் தங்களது கதைகளுடன் முன் வந்தால் அவர் என்ன பதில் சொல்வார் ?'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !