உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சானியா மிர்சாவின் மகனுக்காக பரா கான் கொடுத்த வைத்த அட்வான்ஸ்

சானியா மிர்சாவின் மகனுக்காக பரா கான் கொடுத்த வைத்த அட்வான்ஸ்


பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டையும் தாண்டி திரையுலகில் பரவலான அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்றவர். குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனரும் நடன இயக்குனருமான பரா கானுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் சானியா மிர்சா. அவரது மகன் பிறந்த போது அந்த சமயத்தில் அவரை நேரில் சென்று பார்த்த பரா கான் சானியா மிர்சாவிடம் 100 ரூபாய் தொகையை கொடுத்து இவன் வளர்ந்து பெரியவனாகி நடிகனாக மாறும் போது நான் இவனை வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று கூறினாராம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சானியா மிர்சா, பரா கான் தனக்கு கொடுத்த அந்த 100 ரூபாய் நோட்டை தான் இப்போதும் பத்திரமாக பாதுகாத்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார். அதேசமயம் மகனை டென்னிஸ் விளையாட்டின் மீது ஆர்வம் கொள்ள செய்ய முயற்சி செய்வதாகவும் ஆனால் மகனோ தற்போது கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறிய சானியா மிர்சா, இருந்தாலும் மகன் இஹானுக்கு நடனம் மற்றும் திரைப்படங்கள் மீது ஆர்வம் இருப்பதையும் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !