அஜய் தேவ்கன் பங்களாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட இடங்களை மாநகராட்சி இடிப்பு
ADDED : 1 days ago
சமீபத்தில் ஹிந்தியில் வெளியான ‛திரிஷ்யம் 3' திரைப்படத்தின் வெற்றி மூலம் சந்தோஷத்தை ருசிக்க வேண்டிய நடிகர் அஜய் தேவ்கன் தற்போது சோகத்தில் இருக்கிறார். காரணம் மும்பையில் உள்ள அவரது ஜூகு பங்களாவில் உரிய அனுமதி இன்றி தொடர்ந்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி பலமுறை எச்சரிக்கை அளித்தும் பொருட்படுத்தாமல் அஜய் தேவ்கன் பணிகளை தொடர்ந்து வந்தார். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று அனுமதி அற்ற பகுதிகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார்கள். அதிகாரி சுத்தியல் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு அந்த பகுதிகளை இடிக்கும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.