உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் - ரஜினி படத்திற்கு அடுத்ததாக நெல்சன் என் படத்தை தான் இயக்குகிறார் ; தயாரிப்பாளர் நாகவம்சி அறிவிப்பு

கமல் - ரஜினி படத்திற்கு அடுத்ததாக நெல்சன் என் படத்தை தான் இயக்குகிறார் ; தயாரிப்பாளர் நாகவம்சி அறிவிப்பு


நடிகர் ரஜினிகாந்தை வைத்து தொடர்ந்து ‛ஜெயிலர்' மற்றும் ‛ஜெயிலர் 2' என இரண்டு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன். அடுத்ததாகவும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் புதிய படத்தையும் இவர் தான் இயக்க உள்ளார். அந்த வகையில் தற்போது வேறு எந்த ஹீரோக்களையும் இயக்குவதற்கான வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு இவரிடம் இல்லை.

அதேசமயம் தற்போது மற்றும் தெலுங்கானாவில் ஜெயிலர் 2 படத்தை வெளியிட்டுள்ள பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான நாகவம்சி சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறும்போது நெல்சன் திலீப்குமாரிடம் தனக்காக ஒரு படம் இயக்குமாறு கேட்டுள்ளதாக கூறினார். கமல்ஹாசன். ரஜினிகாந்த் இணையவுள்ள திரைப்படத்தை முடித்துவிட்டு தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் இயக்க நெல்சன் ஒப்புக் கொண்டுள்ளதாக நாகவம்சி அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதிப்பட கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !