‛ஜெயிலர் 2' வெற்றிக்கு நன்றி சொன்ன இயக்குனர் நெல்சன்
ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையமைப்பில், நெல்சன் இயக்கத்தில் அக்டோபர் 15ல் வெளியான படம் 'ஜெயிலர் 2'. இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான கடந்த மூன்று நாட்களிலேயே 300 கோடி வசூலைக் கடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தை, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளார்கள். அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நெல்சன், “திரையரங்குகள் அதிர்கின்றன! தலைவரின் மேஜிக்கே தனி ! 'ஜெயிலர் 2, படத்திற்கு நீங்கள் அளித்த அபரிமிதமான அன்பிற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி, அன்பார்ந்த ரசிகர்களே….ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடும் விதத்தைப் பார்ப்பதை விடச் சிறந்த தருணம் வேறெதுவும் இல்லை, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.