கனடாவில் உள்ள யார்க் சினிமாஸில் 'ஜெயிலர்-2' காட்சிகள் ரத்து!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜெயிலர்-2' படம் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மற்றொரு சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. நெல்சன் திலீப்குமார் மீண்டும் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளார். மேலும், உலக அளவில் வெளியாகியுள்ள ஜெயிலர்-2 படக் காட்சிகள் கனடாவில் உள்ள யார்க் சினிமாஸ் என்கிற திரையரங்கில் அக்டோபர் 21ம் தேதியான இன்று முதல் நிறுத்தப்படவுள்ளன.
அதாவது, வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் தேவையான டிஜிட்டல் பாதுகாப்பு சாவிகளை வழங்கத் தவறியதை அடுத்து, கனடாவில் உள்ள யார்க் சினிமாஸ் ஜெயிலர்-2 படத்தின் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர்களுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதனால் தேவையான கட்டணங்களைச் செலுத்தியிருந்தும் அந்த திரையரங்கால் இப்படத்தைத் திரையிட முடியவில்லை.
இந்த சிக்கலால் ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் தவித்து வருவதுடன், காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் திரையரங்கும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர்களும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் லாபத்தை இழந்து வருகின்றனர். இந்தத் தகராறு திரையரங்கு உரிமையாளர்களுடனான அவர்களது உறவையும் பாதிக்கலாம். இந்த சிக்கல் எப்போது தீர்க்கப்பட்டு ஜெயிலர்-2 பட காட்சிகள் மீண்டும் தொடங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.