உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இந்தியன் 3' : ஷங்கரின் கோரிக்கையை நிராகரித்த லைகா நிறுவனம்!

'இந்தியன் 3' : ஷங்கரின் கோரிக்கையை நிராகரித்த லைகா நிறுவனம்!


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து மீண்டும் அவர்கள் கூட்டணியில் உருவான இந்தியன்-2 தோல்வி அடைந்து விட்டது. மேலும், இந்தியன்-2 படப்பிடிப்பின்போதே இந்தியன்-3 படத்துக்கான அதிகப்படியான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியன்-3 விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஆனால், இப்படத்துக்கு தேவையான மேலும் காட்சிகளைப் படமாக்க 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் கூறியதாகவும், ஆனால் லைகா நிறுவனம் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள காட்சிகளைப் பயன்படுத்தியே இறுதி வடிவத்தைத் தயாரிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்ததால், இந்த மூன்றாவது பாகத்தில் மேலும் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தயாரிப்பாளர்கள் இயக்குனர் ஷங்கரிடத்தில் கூறி வருகிறார்களாம். ஆனால் அவரோ, 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தாமல் இறுதிக்கட்ட பணிகள் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று வாதம் செய்து வருகிறாராம். இதனால் இந்தியன்-3 பட வேலைகள் அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் நிற்பதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !