மம்முட்டியின் 'படயாத்ரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1 hours ago
மலையாள திரை உலகின் பிரபல இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் மம்முட்டி தற்போது நடித்து வரும் படம் 'படயாத்ரா'. கிட்டத்தட்ட 32 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைகின்றனர் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல மம்முட்டியே தனது மம்முட்டி கம்பெனி சார்பாக இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தனது வே பாரர் நிறுவனம் மூலமாக இந்த படத்தை வெளியிடுகிறார். மம்முட்டி அடூர் கோபாலகிருஷ்ணன் கூட்டணியில் வெளியான 'மதிலுகள்' மற்றும் 'விதேயன்' ஆகிய படங்கள் மூலம் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு முறை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.