வாசகர்கள் கருத்துகள் (1)
Excellent film but failed at the box office. Who can forget that College farewell song?
1962ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா எல்லைப் போர் பின்னணியில் உருவான படம் 'ரத்த திலகம்'. இதனை மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, தாதா மிராசி இயக்கினார். 'நேஷனல் மூவிஸ்', பஞ்சு அருணாசலம் மற்றும் சிலர் இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர். திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களைக் கண்ணதாசன் எழுத, கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.
இதில் சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ், மனோரமா, கண்ணப்பா, எஸ்.ஆர். ஜானகி, புஷ்பலதா, ஏ. சந்திரன் பாபு, சண்முகசுந்தரம், சாரதாம்பாள், சி.ஆர். பார்த்திபன், வீராசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அனாதையான குமார் (சிவாஜி கணேசன்) மற்றும் கமலா (சாவித்திரி) ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். குமாரும் கமலாவும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலிக்கத் தொடங்குகிறார்கள். சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் வசித்து வந்த கமலாவின் தந்தை இறந்துவிட, அவள் சீனாவுக்குச் செல்கிறாள். திரும்பி வந்ததும் குமாரைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளிக்கிறாள்.
இதற்கிடையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை மோதல் தீவிரமடைகிறது. குமார் இந்திய ராணுவத்தில் இணைந்து, எல்லைப் பகுதிக்குச் செல்கிறான். கமலா பெய்ஜிங்கிலேயே தங்கிவிட முடிவு செய்கிறாள், அவளது தாயார் மட்டும் இந்தியாவுக்குத் திரும்புகிறார். காதலன் இந்தியாவுக்காக போராடுகிறார், காதலி சீனாவில் தவிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் எந்த மொழியிலும் வெற்றி பெறவில்லை.
Excellent film but failed at the box office. Who can forget that College farewell song?