சசிகுமார் படத்தில் 3 ஹீரோயின்கள்
டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன், சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சசிகுமார். கன்னட இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்குகிறார்.
சசிகுமாருடன் சுவாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் நடிக்கிறார்கள். நரேன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக் மற்றும் வசந்தி ஆகியோரும் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, இது ஒரு புதுமையான குடும்ப திரில்லர் வகையை சேர்ந்த கதை ஆகும். ஒரு திரில்லரில் இதர அம்சங்களை சரியான விகிதங்களில் சேர்த்து பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் வழங்கவுள்ளோம். தமிழில் எனது முதல் திரைப்படத்திற்காக டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோரோடு இணைவது மிக்க மகிழ்ச்சி, என்றார்.