இன்ஸ்டாகிராமில் என்னால் பணம் சம்பாதிக்க முடியாதா? அதிர்ச்சி அடைந்த சைப் அலிகான்
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான், 55 வயதிலும் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். முதல் மனைவியான அம்ரிதா சிங்குடனான 13 வருட குடும்ப வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை கரீன கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மொத்தம் இவருக்கு நடிகை சாரா அலிகான் உட்பட நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் பாலிவுட்டில் பேமஸான தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நிகழ்ச்சியில் மனைவி கரீனாவுடன் கலந்து கொண்டார் சைப் அலிகான்.
இதில் என்ன விஷயம் என்றால் கடந்த அக்டோபர் 11ம் தேதி தான் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் சைப் அலிகான். இதில் இணைந்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தே காரணமாம். இந்த நிகழ்ச்சியில் அதை வெளிப்படையாகவே அவர் சொல்ல அந்த நிகழ்ச்சியை நடத்திய நடிகை அர்ச்சனா பூரன் சிங், இன்ஸ்டாகிராமில் பெண்களை போல உங்களால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியாது என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தார் சைப் அலிகான்.
“என்னால் இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க முடியாதா? அப்படியானால் நான் ஏன் இதில் மெனக்கெட்டு கொண்டிருக்கிறேன்” கூறியவர் மனைவி கரீனா கபூரிடம் திரும்பி நீ தானே இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம் என்று என்னிடம் சொன்னாய் என்று கேட்டார். உடனே அதற்கு கரீனா கபூர் நாம் அதை எப்படி செய்வது என பார்த்துக் கொள்வோம் என்று சமாளிப்பாக பேசி டாபிக்கை மாற்றினார்.