உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 17 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் கங்கனா ரணாவத்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் கங்கனா ரணாவத்!


பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள கங்கனா, தற்போது எம்.பி.,யாக பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். குறிப்பாக பிரபாஸூடன் இணைந்து 'ஏக் நிரஞ்சன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக வட்டாரத் தகவல்களின்படி, 'அல்லரி' மற்றும் 'அனசுயா' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் புகழ்பெற்ற ரவி பாபு தற்போது ஒரு தெலுங்கு ஹாரர் படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்தில் முதன்மை வேடத்தில் நடிப்பதற்காக கங்கனாவை அணுகி, பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆரம்பத்தில் தெலுங்கில் மட்டுமே இந்த படத்தை எடுக்க திட்டமிட்ட அவர், தற்போது கங்கனா ரணாவத் நடிப்பதால் பட்ஜெட்டை அதிகப்படுத்தி பான் இந்தியா படமாக்கியுள்ளார். அந்த வகையில் 17 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் கங்கனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !