உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கலுக்கு 'கிளாடியேட்டர்ஸ்', விஜய்-ம் நடித்திருக்கிறாரா?: அப்டேட்களை அடுக்கும் ஆதிக்

பொங்கலுக்கு 'கிளாடியேட்டர்ஸ்', விஜய்-ம் நடித்திருக்கிறாரா?: அப்டேட்களை அடுக்கும் ஆதிக்


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்திற்கு பின், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக கார் ரேஸில் பிஸியாக இருந்தார் அஜித். அடுத்தப்படத்தையும் ஆதிக் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்தாலும் இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையே தனது கார் ரேஸ் அனுபவங்களை ஆவணப்படமாக வெளியிட முடிவு செய்தார் அஜித். 'கிளாடியேட்டர்ஸ்' என்ற அந்த ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியானாலும், நவம்பரில் படம் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், அடுத்தாண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளதாக முக்கியமான அப்டேட் சொல்லியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதுப்பற்றி பேட்டி ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது: எல்லோரும் குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் நடிக்கவில்லை என்றனர். ஆனால், அவரின் கார் ரேஸ் பற்றிய படத்தை முடித்தப்பிறகே 'டேர் டெவில்' படத்தில் நடிப்பார். 'கிளாடியேட்டர்ஸ்' என்ற அப்படத்தை வெறும் ஆவணப்படமாக கருத முடியாது. அதில் ஒரு 25 நிமிட காட்சிகளை பார்த்தேன். பயங்கரமாக வந்துள்ளது. 'எப் ஒன்' என்ற ஹாலிவுட் படம் எழுதி, நடித்து, இயக்கப்பட்டது. ஆனால், இது உண்மையான ரேஸை படமாக எடுத்துள்ளனர்.
கிளாடியேட்டர்ஸ் படத்தின் இடைவெளிக் காட்சி எல்லாம் பயங்கரமா இருக்கு, ஜிவி பிரகாஷ் மியூசிக் எல்லாம் கிளிச்சிட்டாரு. சூப்பரா பண்ணிட்டாரு. ஆவணப்படமாக இல்லாமல் நேர்த்தியான படமாகவே உருவாகியுள்ளது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் உள்ளன. எனக்கு ரொம்ப பிடிச்சது இடைவெளி தான். படத்தின் டைட்டில் வரும்போது சூப்பரா இருக்கும். ஜிவி பிரகாஷ் இசையில் அனிருத் ஒரு பாட்டும் பாடியுள்ளார். இதெல்லாம் நான் சொல்லலாமா எனத் தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.

கிளைமாக்ஸில் விஜய்?

பின்னர், முதல்வர் விஜய், லண்டனில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை துவங்கி வைத்தது, அவருடன் இருந்தது போன்ற காட்சிகள் படத்தின் கிளைமாக்ஸில் இருக்குமா என தொகுப்பாளர் கேட்க, ''எனக்கு ஒரு 25 நிமிடங்கள் தான் காட்டினார்கள். அவ்வளவுதான் எனக்கு தெரியும். நானும் படம் ரிலீசாவதற்காக காத்திருக்கிறேன். வேறு எதுவும் தெரியாது'' என பதிலளித்தார்.

ரிலீஸ் எப்போது?

'கிளாடியேட்டர்ஸ்' ரிலீஸ் பற்றி பேசிய ஆதிக், ''தயாரிப்பாளர் ஷாலினியின் பிறந்தநாளை (நவ.,20) முன்னிட்டு படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர். அப்போது பிறந்தநாளைக்கு வேண்டாம், பண்டிகை நாளாக இருந்தால் நன்றாக இருக்கும் என ஷாலினி மேடம் கூறினார். அதன்படி, பொங்கலுக்கு கிளாடியேட்டர்ஸ் ரிலீசாகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !