உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மனோரமாவிற்கு முன்பே சென்னை ஸ்லாங் பேசிய சாவித்ரி

பிளாஷ்பேக்: மனோரமாவிற்கு முன்பே சென்னை ஸ்லாங் பேசிய சாவித்ரி


பொதுவாக சென்னை ஸ்லாங் பேசி அதிகம் நடித்தவர் மனோரமா. நடிகர்களில் கமல்ஹாசன் அதிகம் பேசி இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு முன்பே சென்னை ஸ்லாங் பேசி நடித்தவர் சாவித்ரி. அப்படி நடித்த படம் 'ஆயிரம் ரூபாய்'.

சின்ன அண்ணாமலை தயாரித்த இந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கதை, வசனம் எழுதி இயக்கினார். ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், அசோகன், ராகினி, மோகனா உட்பட பலர் நடித்தனர்.

தற்கொலை எண்ணதில் உள்ள சந்தானம் (ஜெமினி கணேசன்) ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறான். குழந்தையின் தாய் ரேவதி (ராகினி) அவருக்கு அறிவுரை கூறி அனுப்புகிறாள். இதனால் மனம் மாறும் சந்தானம் பஸ்சில் பல்பொடி விற்கிறார். இதற்கிடையில். கூத்து கட்டும் வள்ளியைக் (சாவித்திரி) காதலிக்கிறான். இவர்கள் வாழ்க்கைக்கு இடையில் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று குறுக்கிடுகிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதுதான் படத்தின் கதை.

கதைக்களம் சென்னை குடிசைவாழ் மக்கள் பகுதி என்பதால் கூத்து கட்டும் வள்ளி கேரக்டரில் நடித்த சாவித்ரி சென்னை ஸ்லாங்கை அசாத்தியமாக பேசி நடித்தார். இது அப்போது பரவலான பாராட்டுகளை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !