உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்ணாடி கூண்டு, புல்லட் புரூப் ஜாக்கெட் பாதுகாப்புடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சன்

கண்ணாடி கூண்டு, புல்லட் புரூப் ஜாக்கெட் பாதுகாப்புடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சன்

சமீப நாட்களாக, அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் காரில் பயணித்த போது மர்மநபர் ஒருவரால் சுடப்பட்ட சம்பவம் நடைபெற்ற பிறகு பாலிவுட் நடிகர்கள் அனைவருமே காவல்துறை மற்றும் தனியார் பாதுகாப்பை தங்களுக்காக அதிகப்படுத்திக் கொண்டுள்ளனர்.. நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை சந்திப்பதையே தவிர்த்து உள்ளார்.. அதேசமயம் நடிகர் அமிதாப்பச்சன் ஞாயிற்றுக்கிழமை தோறும் தனது ரசிகர்களை வீட்டு வாசலில் சந்திப்பது வழக்கம்..

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கூட இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தாலும் கூட, இத்தனை வருடங்களாக தான் ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்திக்கும் வழக்கத்தை தவிர்க்க வேண்டாம் என இந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களை சந்தித்துள்ளார். அதே சமயம் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்தபடி ரசிகர்களை சந்தித்தார் அமிதாப்பச்சன். கூடவே அவரது மகன் அபிஷேக் பச்சனும் தனது தந்தையின் பாதுகாப்புக்காக அவரது அருகிலேயே நின்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !