உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த ஸ்ரீலீலா

ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த ஸ்ரீலீலா

‛ஜெயிலர் 2' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‛தர்மன்'. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்தார். அதுதொடர்பான அறிவிப்பு கடந்த 25ம் தேதி வெளியானது. இப்போது இளம் முன்னணி நடிகையான ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினி உடன் ஸ்ரீலீலா இணையும் முதல் படம் இதுவாகும்.

மருத்துவ பின்னணியில் கிரைம் கலந்த ஆக் ஷன் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பராசக்தி படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீலீலா, தற்போது தனுஷின் ‛ஓம்' படத்தில் நடித்துள்ளார். தவிர அஜித்தின் ‛டேர் டெவில்' படத்திலும் நடிக்கிறார். இப்போது ரஜனி படத்திலும் இணைந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக கைப்பற்றி வருகிறார் ஸ்ரீலீலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !