ஜான் டோ படத்தில் அர்ச்சனா, அவர் மகள் கேரக்டர் பின்னணி?
மதுமிதா இயக்கும் ஜான் டோ படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோ. இதில் முக்கியமான வேடத்தில் விஜே அர்ச்சனாவும், அவர் மகள் சாராவும் நடிக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் கேரக்டர் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டு இருந்தது. இப்போது வெளியே கசிந்துவிட்டது. கதைப்படி சிறுவன் நீரவ் காணாமல் போக அவனை கண்டுபிடிக்கும் கேரக்டரில் போலீஸ் ஆபீசராக அர்ஜூன்தாஸ் வருகிறார். அந்த சிறுவனின் அக்காவாக அர்ச்சனா மகள் சாரா வருகிறார். இவர்களின் அம்மாவாக ஹரியானாவை சேர்ந்த சிருஷ்டி வருகிறார்.
பிளாஷ்பேக்கில், அர்ஜூன்தாஸ் அம்மாவாக அர்ச்சனாக நடிப்பதாக தகவல். இன்னொரு போலீஸ் ஆபிசராக சஞ்சனா நடராஜன் நடித்து இருக்கிறார். டாக்டர் படத்தில் அர்ச்சனாவும், அவர் மகள் சாராவும் இணைந்து நடித்தனர். அதேபோல், இந்த படத்திலும் நடித்து இருக்கிறார்கள். ஆனால், இருவரும் திரையில் ஒன்றாக வரும் காட்சிகள் இல்லை என கூறப்படுகிறது.
விரைவில் சாரா ஹீரோயின் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜான் டோ என்பது ஆங்கிலம் பேசும் சட்ட, மருத்துவ, நிர்வாக மற்றும் பொதுவான சூழல்களில், பெயர் குறிப்பிடப்படாத, அறியப்படாத, அடையாளம் காண முடியாத அல்லது கற்பனையான ஒரு ஆண் நபரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தற்காலிகப் பெயராகும். இந்த படத்தில் ஜான் டோ யார் என்பதும் சஸ்பென்ஸ்.