ராமாயணா முதல் நாள் வசூல் 130 கோடி ?
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் நவம்பர் 5ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'ராமாயணா'. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப்பிங் என்று சொல்ல முடியாத அளவிற்கு உதட்டசைவைக் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
முதல் நாள் வசூலாக இப்படம் 130 கோடியைப் பெற்றிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தென்னிந்தியாவில் 20 கோடியும், வட இந்தியாவில் 60 கோடியும் என இந்திய அளவில் சுமார் 80 கோடியும், வெளிநாடுகளில் 50 கோடியும் வலித்திருக்கலாம் என்கிறார்கள். தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் அதிகமான வசூல் கர்நாடகாவிலிருந்து கிடைத்திருக்கிறதாம். கன்னட நடிகரான யஷ் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதே அதற்குக் காரணம்.
தீபாவளி வார இறுதியில் இப்படம் 500 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.