கேரள தொழிலதிபரை மணந்தார் நடிகை அஞ்சு குரியன் திருமணம்
ADDED : 18 minutes ago
மலையாள நடிகையான அஞ்சு குரியன் தமிழில் 'சென்னை டூ சிங்கப்பூர், சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2024ல் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ரோஷன் கரிப்பப்பரம்பில் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இரு ஆண்டுகளுக்கு பின் தற்போது இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணம் என ஏற்கனவே அஞ்சு குரியன் தெரிவித்து இருந்தார்.
தற்போது திருமண போட்டோக்களை பகிர்ந்து அஞ்சு வெளியிட்ட பதிவில், “என் வாழ்நாள் முழுவதும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கேட்ட ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்'' என தெரிவித்துள்ளார்.