உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் சர்ச்சை - வெளிப்படையாகப் பேசிய கியாரா அத்வானி

டாக்சிக் சர்ச்சை - வெளிப்படையாகப் பேசிய கியாரா அத்வானி


ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. கன்னடத்தில் வெளிவந்த 'டாக்சிக்' படத்தில் அதன் நாயகன் யஷ் உடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். அது குறித்து அப்போது ஒரு சர்ச்சை எழுந்தது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் இது குறித்து கியாரா வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரது கணவரும் நடிகருமான சித்தார்த் மல்கோத்ரா கலந்து கொண்டார்.

“ஒரு ஆண் பல பெண்களுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், ஒரு பெண் அப்படி நடித்தால் உடனே 'அவர் திருமணமானவர் அல்லவா', 'இதைப் பற்றி அவர் கணவர் சித்தார்த் என்ன நினைக்கிறார்,' என்று கேட்கிறார்கள். இது பாலின சார்பு தானே, இரட்டை நிலைப்பாடு தானே.

ஐஸ்வர்யா ராய் முதல் பல அற்புதமான நடிகைகள் வரை பல ஆண்டுகளாக நடிகைகள் இதை எதிர்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், என் கணவர் இதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை, இதைப் பற்றி நாங்கள் பேசியதே இல்லை” என்றும் தெரிவித்துள்ளார் கியாரா.

மேலும், 'டாக்சிக்' படத்தின் தோல்வி குறித்து கரண் கேட்ட மற்றொரு கேள்விக்கு, “முதல்நாளில் மிகுந்த வேதனையாக இருந்தது. ஒட்டு மொத்தக் குழுவாக நாங்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. படம் எதிர்பார்த்தபடி அமையாததால் வார இறுதியில் மிகவும் மனமுடைந்து போய் இருந்தேன்.

அப்படத்தில் நான், வழக்கமான பாணியிலிருந்து விலகி, ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்ததைப் பலரும் பாராட்டினார்கள். எனது திரையுலகப் பயணத்தில் இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !