உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பர்மேன் கதையில் கதாநாயகனாக நடிக்கும் நடிகை சிவரஞ்சனி மகன்

சூப்பர்மேன் கதையில் கதாநாயகனாக நடிக்கும் நடிகை சிவரஞ்சனி மகன்

90-களில் தமிழில் தலைவாசல், சின்ன மாப்ள உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சிவரஞ்சனி. தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் நடித்து வந்த போது நடிகர் மேகா ஸ்ரீகாந்த் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் இவர்களது மகன் ரோஷன் மேகா சினிமாவில் களமிறங்கி உள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் மூலம் அவர் அறிமுகமாக வேண்டி இருந்தது. சில காரணங்களால் அது கைகூடவில்லை.

இந்த நிலையில் தெலுங்கில் சாகச படமாக உருவாக உள்ள ஒரு சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படத்தில் வித்தியாசமான மற்றும் சக்தி வாய்ந்த தோற்றத்தில் நடிக்க உள்ளார் ரோஷன் மேகா. அவரது தந்தை ஸ்ரீகாந்த் கிளாப் அடித்து படத்தை துவங்கி வைத்தார். இதில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் 2024 மிஸ் வேர்ல்ட் இந்தியா (ரன்னர் அப்) ரேகா பாண்டே திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். நடிகர் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இந்திரகாந்தி மோகன கிருஷ்ணா என்பவர் இப்படத்தை இயக்குகிறார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !