உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி படப்பிடிப்பில் இருந்து திரும்பிய போது விபத்தில் சிக்கிய நடன இயக்குனர்

சிரஞ்சீவி படப்பிடிப்பில் இருந்து திரும்பிய போது விபத்தில் சிக்கிய நடன இயக்குனர்

தெலுங்கில் தற்போது இயக்குனர் பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'காகா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. பிரபல நடன இயக்குனர் சேகர் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் வடிவமைத்து வருகிறார். சமீபத்தில் இரவில் இப்பாடல் காட்சியைப் படமாக்கிவிட்டு காரில் தனது குழுவினர் மூவருடன் சேர்ந்து வீட்டிற்குப் பயணித்த போது, தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சம்சாபாத் என்கிற பகுதியில் கொல்லப்பள்ளி கிராமத்திற்கு அருகில் திடீரென காருக்குப் பின்னால் பழங்களை ஏற்றி வந்த லாரி இவர்கள் கார் மீது மோதியது.

நல்ல வேளையாக இந்த விபத்தில் நால்வரும் சிறுசிறு காயங்களுடன் உயிருக்கு எந்த ஆபத்தும் இன்றித் தப்பினார்கள்.. இந்தத் தகவலை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டுள்ள சேகர் மாஸ்டர், தான் நலமாக இருப்பதாகவும் தற்போது அய்யப்ப தீட்சையில் இருப்பதால் அந்த சுவாமியின் அருள் தான் தன்னைக் காப்பாற்றியதாகவும், அன்று மாலையே மீண்டும் 'காக' படத்தின் படப்பிடிப்பிற்குப் பணியாற்றக் கிளம்பிச் செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !