பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிரி பாபு காலமானார்
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிரி பாபு. 83 வயதான அவர் முதுமை தரும் உடல்நல பிரச்னைகளுக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அடிப்படையில் நாடக கலைஞரான கிரி பாபு, 1973ம் ஆண்டு வெளியான 'ஜகமே மாயா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். என்.டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, மோகன் பாபு மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பல தலைமுறை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடக்கத்தில் கதாநாயகனாக நடித்தாலும், பின்னர் வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் 600கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில படங்களை இயக்கவும் செய்தார்.
மறைந்த கிரி பாபுவுக்கு ரகு பாபு, போஸ் பாபு ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் ரகு பாபு தெலுங்குத் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளார்.