உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீன் ரூ.260 கோடி வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்தது

சீன் ரூ.260 கோடி வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்தது

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளிக்கு வெளியான சீன் படம், எல்லா இடங்களிலும் சீரான ஓட்டத்துடன் வணிக ரீதியாகப் வெற்றி பெற்றுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகும், வார நாட்களில் இப்படம் சிறப்பாகத் தாக்குப்பிடித்ததுடன், இரண்டாவது வார இறுதியில் படத்தின் வசூல் கணிசமான ஏற்றத்தைக் கண்டது.

படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீன் படம் வெளியான 11 நாட்களில் உலகளவில் ரூ. 260 கோடி வசூலித்து, சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்துள்ளது. அதோடு சூர்யாவிற்கு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் உருவெடுத்துள்ளது.

இப்படத்தில் நஸ்லென் வில்லனாகவும், நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தப் பொழுதுபோக்கு திரைப்படத்தை சூர்யா, ஜித்து மாதவன் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். டொவினோ தாமஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !