உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம்

மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம்

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்துள்ள 'சத்யவான் சாவித்திரி' படம் இன்று வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் இயக்குநர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷைப் பாராட்டிப் பேசும்போது அவரது தொடையை தொட்டுப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. மிஷ்கின் வரம்பு மீறி நடந்து கொண்டார் என்றும், அதனை கீர்த்தி சுரேஷ் அசவுகரியமாக உணர்ந்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கீர்த்தி சுரேஷை பின்தொடரும் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கீர்த்தி சுரேஷ் “முதலாவதாக, என் முகத்தில் எங்கே அசவுகரியம் தெரிகிறது? நாங்கள் இருவரும் தந்தை - மகள் போன்ற பிணைப்பைக் கொண்டுள்ளோம் என்று அவரே கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?

இரண்டாவதாக, ஒருவேளை நான் அசவுகரியமாக இருந்தேன் என்றே வைத்துக் கொண்டாலும், திரைப்படங்களில் எங்களைத் தொட்டு நடிக்கிறார்கள் என்பதற்காகப் பொதுவெளியிலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? சகோதரரே, நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என காட்டமாக பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !