பிரபல இயக்குனரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார்
ADDED : 16 minutes ago
சின்னத்திரையில் ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். தொடர்ந்து ஆல்பம், படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். ‛என்ன சொல்ல போகிறாய்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அதன்பின் ‛செம்பி, ஹாட் ஸ்பாட் 2 மச்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இவருக்கும், மறைந்த பிரபல இயக்குனர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரிக்கும் திருமணம் முடிவாகி, இன்று(நவ., 20) கோவையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குனர் ராஜசேகர் தமிழில் ரஜினியின் ‛தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், தர்மதுரை' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார்.