"எனக்கு முன்பே தெரியாது" : ஸ்ரத்தா கபூரிடம் மன்னிப்பு கேட்ட சல்மான் கான்
பாலிவுட்டில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் சல்மான் கானின் 'மாத்ருபூமி' திரைப்படம். வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாக இருக்கிறது. அபூர்வ லக்கியா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்ரங்கதா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற யுத்தத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதே தேதியில்தான் ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள 'ஈதா' திரைப்படமும் வெளியாகிறது.
இதனை அடுத்து ஸ்ரத்தா கபூருக்கு போன் செய்த சல்மான் கான், எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உன் படமும் டிசம்பர் 4 அன்று வெளியாவது எனக்கு முன்கூட்டியே தெரியாது. தெரிந்திருந்தால் என் படத்தை வெளியிட்டு இருக்க மாட்டேன். தெரியாமல் நடந்துவிட்டது, மன்னித்துவிடு எனக் கூறியுள்ளார். இது குறித்து அவருடன் போனில் பேசியதாக சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கான் கூறியுள்ளார்.
அப்படி அவர் சொன்னதற்கு சல்மான் கானிடம், இல்லை சார், நம் இருவரின் படங்களும் வெளியாவதற்குப் போதுமான இடம் திரையரங்குகளில் இருக்கிறது என்று ஸ்ரத்தா கபூர் பதில் அளித்தார் என்றும் கூறிய சல்மான் கான், தனது படத்தின் அந்த புரமோஷன் நிகழ்ச்சியிலேயே 'ஈதா' படத்தின் பெயரைப் பார்வையாளர்களிடம் உச்சரித்துக் கோஷமிட வைத்து அந்தப்படத்திகு தனது ஆதரவைத் தெரிவித்தார்.