தமிழில் கதை நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்
ADDED : 21 minutes ago
சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் கதை நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை எழுதி இயக்கும் தருண் தேஜா, ஏற்கெனவே வசந்த் ரவி நடிப்பில் வெளியான 'அஸ்வின்ஸ்' திரைப்படத்தை இயக்கியவர்.
உளவியல் ஹாரர் பின்னணியில் உருவான இப்படம், அதன் மிரட்டலான காட்சியமைப்புகள், ஒலி வடிவமைப்பு மற்றும் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக, ஹாரர் வகைத் திரைப்படங்களில் தனது தனித்துவமான இயக்க அணுகுமுறையை வெளிப்படுத்திய தருண் தேஜா, தற்போது ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் விவரங்களைப் படக்குழு அடுத்தடுத்த அறிவிப்புகளாக வெளியிட உள்ளது.