உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்' பொங்கல் ரிலீஸ் உறுதி

விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்' பொங்கல் ரிலீஸ் உறுதி

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் ‛பாக்கெட் நாவல்' படம் ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்துக்குபின் இருவரும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஐந்து பாடல்கள், சுவாரஸ்யமான கதைக்களம், கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் என பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களது அனுபவங்களையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். மற்றொரு சுவாரஸ்யமாக, வழக்கமாகத் தனது படங்களின் படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும் தியாகராஜா குமாரராஜா, இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி குறுகிய காலத்திலேயே நிறைவு செய்துள்ளார்.

இதில் மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ராஜ் பி. ஷெட்டி முதல் முறையாக தமிழில் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !