தயாரிப்பாளரின் டேப் ரெக்கார்டரை விற்று சம்பள பாக்கியை எடுத்துக் கொண்ட அக் ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கி சினிமாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் பணக்காரர் நடிகர்கள் வரிசையில் இவரும் இடம் பிடித்திருக்கிறார். அதேசமயம் ஒரு காலகட்டத்தில் குறைந்த சம்பளத்தில் நடித்து வந்தபோது அந்த சம்பளத்தை வாங்க தான் எவ்வளவு போராட வேண்டி இருந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
ஒரு படத்திற்கு தனக்கு வரவேண்டிய 68,000 பாக்கித் தொகையை படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளர் தன்னால் தர முடியவில்லை என கூறிவிட்டார். அப்போது அதை கேட்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது பணம் கிடைக்காத கோபத்தில் அவர் வீட்டை சுற்றி பார்த்த போது அங்கே இருந்த விலை உயர்ந்த டேப் ரெக்கார்டர் ஒன்று கண்ணில் பட்டது. அதை எடுத்துச் சென்று ரூ 32,000-க்கு விற்று சம்பள பாக்கியை ஓரளவு சரி செய்து கொண்டதாக கூறியுள்ளார் அக் ஷய் குமார்.
பெரும்பாலும் பல பெரிய நடிகர்கள் ஒரு படம் தோல்வி அடையும்போது தயாரிப்பாளர்களிடம் தங்களது சம்பள பாக்கி தொகையை கேட்காமல் விட்டு விடுவார்கள் என்று கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால் குறைவான ஊதியம் வாங்கிய காலத்தில் அந்த பாக்கித்தொகை மிகப்பெரியதாக அக் ஷய் குமாருக்கு தோன்றி இருக்கிறது. அதனால் தான் அவர் இப்படி செய்ததாக கூறியுள்ளார்.