உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிங்கப்பெண்ணே தொடரில் இருந்து விலகவில்லை: அமல்ஜித் விளக்கம்

சிங்கப்பெண்ணே தொடரில் இருந்து விலகவில்லை: அமல்ஜித் விளக்கம்

கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'சிங்கப்பெண்ணே'. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து பல்வேறு தடைகளையும் அவமானங்களையும் கடந்து வாழ்க்கையில் சாதிக்கப் போராடும் ஆனந்தி என்ற பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது.

இந்த தொடரில் 'அன்பு' என்ற முக்கியமான கேரக்டரில் அமல்ஜித் நடித்து வருகிறார். தற்போதைய கதைப்படி அவர் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக காட்டப்பட்டுள்ளது. சமீபத்திய எபிசோட்களில் அவர் தொடர்பான காட்சிகள் எதுவும் இல்லை. இதனால் அவர் தொடரை விட்டு விலகி விட்டதாக தகவல்கள் பரவியது.

இதற்கு அமல்ஜித் தனது இன்ஸ்டா பதிவின் முலம் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிவில் “ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் சிங்கப்பெண்ணே தொடரிலிருந்து விலகவில்லை. சீரியலின் இறுதி வரை தொடர்ந்து நடிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

என்றாலும் சீரியல் குழுவுடன் அமல்ஜித்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரது கேரக்டர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்க இருக்கிறார் என்றும் இன்னொரு தகவல் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !